Tuesday, September 8, 2009

ஜார்ஜ் வாஷிங்டன்


ஜார்ஜ் வாஷிங்டன் - வெகு நாட்களுக்கு பிறகு ஒரு மாபெரும் மனிதரின் வாழ்கை சரிதையை பற்றி படிக்கும் வாய்ப்பு எனக்குக்கிட்டியது. இந்த புத்தகத்தை படிக்கும் முன்பு எனக்கு இவரைப்பற்றி தெரிந்த ஒரே விஷயம் "இவர் தான் அமெரிக்காவின் முதல் அதிபர்.".

ஜார்ஜ் எப்படி ஒரு சாதரணமான குடும்பத்தில் பிறந்து, ஒரு நாட்டின் அதிபராக உயர்ந்தார் என்பதை சுவாரசியமாக விளக்குகிறது இந்த புத்தகம்.

ஒரு மாபெரும் மனிதரின் வாழ்க்கையை 120 பக்கங்களில் சுவாரசியமாக விளக்கி உள்ளார் இதன் ஆசிரியர் பாலு சத்யா.

தன் தந்தையிடம் இருந்து நேர்மையை, ஒழுக்கத்தை, போராடும் குணத்தை கற்று கொள்கிறான் சிறுவன் ஜார்ஜ். தன் அண்ணன் லாரன்ஸ் ராணுவ முகாமை பற்றியே பேசிக்கொண்டிருப்பதை பார்த்துத்தான் அவனுக்கு ராணுவத்தில் சேரும் ஆசை
பிறக்கிறது.

பல பிரச்சனைகளையெல்லாம் சந்தித்த பிறகு ராணுவத்தில் சேருகிறான் ஜார்ஜ். பல கடுமையான பயிற்சிளை எல்லாம் மேற்கொண்டு, தான் ஒரு சிறந்த ராணுவவீரன் என்பதை நிரூபிக்கிறான், கவர்னர் த்வின்த்யின் மூலம் அவரது படையில் இணைகிறான்.

எண்ணற்ற பல கடுமையான பிரச்சனைகளையும் , போர்களையும் சந்தித்து அதில் வெற்றியும் பெற்று தளபதி ஆகிறான்.

பாஸ்தன் தேநீர் விருந்து பற்றி மிக அற்புதமாக விளக்கியுள்ளார் இதன் ஆசிரியர்.

அதிபராக பொறுப்பேற்றவுடன் அவர் அறிவிக்கும் முதல் விதி - "தம் குடும்பதில் உள்ளவர்கள் யாரும் அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது"

இதுதான் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக அமெரிக்கர்கள் தொடுத்த முதல் போர். அந்த போரில் பிரிட்டிஷ் மரண அடி வாங்கியது. இத்தனைக்கும் அமெரிக்காவிடம் அவ்வளவு
பெரிய படை என்று ஒன்றும் கிடையாது.

அந்த போரில் அமெரிக்கப் படைகளை சார்ந்த 50 பேர் இறந்து போனார்கள். ஆனால் பிரிட்டிஷ் படையில் 73 பேர் இறந்து போனார்கள்.

எப்படி படிப்படியாக உயர்கிறார் அதிபராக என்பதை மிக அழகாக விளக்குகிறது இந்த புத்தகம்.

மினுமினுக்கும் வல்லரசு தேசமாக அமெரிக்கா இன்று அறியப்படுவதற்கான வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திய ஜார்ஜ் வாஷிங்டனின் பிரமிப்பூட்டும் சரித்திரம்.

கிழக்கு பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். நிச்சயம் படிக்கவேண்டிய ஒரு புத்தகம் - ஹரி


buy it from கிழக்கு பதிப்பகம்

No comments: